பிரதமரின் கருத்து முட்டாள்தனமானது! – விமல் குற்றச்சாட்டு

எரிபொருள் நெருக்கடி தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இதுபோன்ற அறிக்கைகள் நகைச்சுவை மற்றும் முட்டாள்தனமானவை.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவிடும் என்ற அமைச்சரின் அறிவிப்பினால் இந்த தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வங்கிகளில் இருந்து பணம் வழங்கப்படவில்லை என்றால், எரிபொருள் மற்றும் எரிவாயுயை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply