இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது – பிரபாஸ்!

<!–

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது – பிரபாஸ்! – Athavan News

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த பிரபாஸ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்படி கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசுகிறார்கள். எனது படங்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது. சம்பளம் பற்றி பேசினால் வரி பிரச்சினை வரும்.

நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. பாகுபலி 3-ம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது. பாகுபலி 3-ம் பாகத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply