
அரசாங்கம் சில அமைச்சர்கள் தம் பலம் என நினைத்துக் கொண்டு பல தவறான செயல்களை செய்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று சமகி ஜன பல வேகய கட்சியின் தலைமை அலுவலகத்தில் மதுர விதாரண என்ற பாராளுமன்ற அமைச்சர் எங்களுடைய அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பின் முட்டை அடித்துள்ளனர்.
நாங்கள் கேற்கிறோம் மதுர விதாரண அவர்களிற்கு உமக்கு என்ன பிரச்சினை. நாட்டில் தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சி காணப்படும் வேலையில் மக்களின் தேவை குறித்து நாங்கள் மக்களுடன் இருக்க வேண்டி உள்ளது.
நாட்டில் பல பிரச்சினைகளிற்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுர விதாரண அவர்கள் அவ் போராட்டங்களில் கலந்து நாட்டுகாக குரல் கொடுங்கள். சமகி ஜன பல வேகய கட்சியின் மீதான பயத்தினால் இன்று நீங்கள் நம் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அன்று விமல் வீரவன்ச அவர்கள், உதய கம்மன்பில அவர்கள் ஜனாதிபதியுடன் சென்றமைக்கு இன்று அவர்கள் பதவியில் இல்லாது உள்ளனர். நாங்கள் செயற்படமாட்டோம். இவ்வாறான செயற்பாடுகளிற்கு எங்களுடைய கட்சி பயப்படாது என்றார்.





