
புத்தூர் – நவக்கிரி பகுதியில் நேற்றிரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
பூப்புனித நீராட்டு விழாவின் போது இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 14 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. அத்துடன் 2,500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தாளும் திருடப்பட்டுள்ளது.
வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் தாலி உட்பட 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





