சிலாபம், பங்கதெனியவில் இயங்கி வரும் கொடுவா மீன் மற்றும் அலங்கார மீன்களுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை மேற்படி கொடுவா மீன் மற்றும் அலங்கார மீன்களுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், மேற்படி இனப் பெருக்க நிலையத்தின் உற்பத்திகளை அதிகரித்து, நாட்டின் அனைத்து பாகங்களுக்குமான கொடுவா மற்றும் அலங்கார மீன் குஞ்சுகளை விநியோகிப்பது தொடர்பாக தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
அத்துடன், கொடுவா மற்றும் அலங்கார மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.






