
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மணல் வியாபாரிகள் இருவரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிண்ணியா குறிஞ்சாகேணி பகுதியை சேர்ந்த வசீம் (30 வயது) மற்றும் ரமீஷ் (33 வயது) என தெரியவருகின்றது.





