
சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட கால விசாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை வழங்கும் நோக்கில் குறித்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறித்த யோசனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இது அந்நிய நேரடி முதலீட்டை கணிசமாக அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும் வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமானவர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.





