
வடக்கு கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், நாட்டில் முக்கிய பிரச்சினை நிலவும் போது ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் எம்பிக்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்கள் இப்போது மின்சாரப் பிரச்சினைக்கு கூட வாய் திறக்கிறார்கள் இல்லை.
ஆளும் கட்சியின் சிங்கள எம்.பிக்கள் கூட தமது கருத்துக்களை துணிவாக கூறிய நிலையில், பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். சரி அரசுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு தமிழ் தரப்புக்கள் யாரும் இல்லை. அதை விடுவோம்.
இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். தாம் செய்த கொலைகளை மறைக்க, அரசின் வாகனம், சம்பளம், பதவிகளை பெற வேண்டும் என்றால் இவர்கள் எப்படி வாய் திறப்பார்கள். வடக்கு கிழக்கில் இப்போது பேக்கரி இல்லை. இது தான் நிலைமை. உங்களை பொய் கூறச் சொல்லவில்லை. மக்களின் உண்மையான பிரச்சினையை கூறுங்கள் போதும்.
வெலிகந்தை பிரதேசத்தில் பிறேமினி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையுடன் தொடர்புடைய நபர் என கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் கூட இங்கே உள்ளனர்.
இந் நிலையில் இங்கே மகளிர் தினம் நடைபெறுகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் தமது மக்களுக்கு தேவையான விடயங்களை பார்த்துப் பார்த்து செய்கின்றனர். இங்கே பிள்ளையான், வியாழேந்திரன் என்ன செய்கின்றனர்.- என்றார்.





