
போர் குற்றம் தொடர்பில், பொறுப்பு கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்ற போதும் அதனை பெரிதுபடுத்தாமல் அரசு இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியாவுக்கு ஐ.நா அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மனித உரிமை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு லெர்ச்சட் ஆணையாளரினால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது.
மேலும், மார்ச் 03 ஆம் திகதி மீண்டும் நடைபெற்ற அமர்வில் இலங்கை பற்றியதான எழுத்து மூலமான அறிக்கையினை சமர்ப்பித்த போதிலும், அதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் இலங்கை அரசு நடந்ததாகவும் ஐ.நா உரிமை ஆணையகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து இனவாத பிரச்சினைகளை தீர்த்து மக்களுக்கு திருப்தி தரும் அரசாங்கத்தினை அமைக்கும் செயற்பாடும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக போர்க்காலத்தில் அல்லது மற்றைய பயங்கரவாத காலங்களிலும் நீதித்திரப்புகளுக்கு உட்பட்டவர்கள், தண்டனைக்குரியவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளை வழங்கி குறிப்பாக இராணுவத்தினரிடம் இந்த செல்வாக்கினை காட்டியமையும் குற்றமாக அறியப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பங்கேற்ற உறுப்பு நாடுகளும் தங்களின் முன்னேற்றகரமான கருத்துக்களை தமது தரப்பிலிருந்து முன்வைத்தனர். இதன்படி இந்தியா, பிரித்தானிய அமெரிக்கா போன்ற பல நாடுகள் முன்னேற்றகரமான கருத்துக்களை தெரிவித்திருந்தன.
இதன்படி, இனப்பிரசனைகளுக்கு சமத்துவமான, அதிகாரங்களை பகிரும் வகையிலும் மக்களுக்கு திருப்தி தரும் அரசாங்கத்தை அமைக்குமாறும் 13 ஆம் திருத்த சட்டத்தின்படி நிறைவேற்றப்பட வேண்டும் என இந்தியாவால் கருத்து முன் வைக்கப்பட்டது.- என்றார்.





