
ஹாலி எல உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதம் மொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.





