
எங்களுடைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் கேள்வியொன்றிற்கு பதிலளித்துக் கொண்டிருக்கையில் எதிர்க்கட்சியினர் இடைமறித்து கேள்வியொன்றை எழுப்பலாமா என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மகிந்தானந்த ரணில் விக்கிரமசிங்க அனுமதித்தால் நான் அனுமதிப்பேன். அவர் அனுமதித்தால் நான் அதற்கு அனுமதி வழங்குவேன் அவரே தற்போது எங்கள் தலைவர் என தெரிவித்தார்.
இது ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் என்ற தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது என இணைய ஊடகமொன்று செய்தி வெளியி;ட்டுள்ளது.





