
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தரித்து நின்ற ஹையேஸ் வாகனம் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச சென்றுள்ளனர்.
நேற்றிரவு நால்வர் அடங்கிய குழு ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





