மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக பலி! – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த சு.சுதர்சன் என்ற 29 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

சீமெந்து கல் அரியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கால் கல் அரியும் இயந்திரத்துக்கு மின் பாய்ந்துள்ளது. இதனால் இயந்திரத்தை இயக்கிய இளைஞர் மின் தாக்கத்துக்கு இலக்கானார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Leave a Reply