
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து வாடகைக்கு தங்கியிருந்த இளம் யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து, திருநெல்வேலிப் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்த யுவதியின் நடவடிக்கையில் வீட்டு உரிமையாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
கோப்பாய் பொலிஸார் அந்த யுவதியிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் மருத்துவபீட மாணவி இல்லை அவர் காண்பித்த அடையாள அட்டை போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
யுவதியை உடனடியாகக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேக நபர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

