
இங்கே வரும் நாடளுமன்ற உறுப்பினர்கள் எப்போது சாவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றே எனக்கு தோன்றுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது. மின்சாரப் பாவனையை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே நாடாளுமன்றில் அணைத்து ஏசிகளும், லிப்ட் களும், மின்குமிழ்களும் வேலை செய்கின்றது.
முதலில் நாம் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் எப்போது சாவார்கள் என்று மக்கள் எண்ணக் கூடாது என்றார்.

