
அநுராதபுரம் – வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
குறித்த பெண், அவரது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததை அவதானித்த பிரதேச மக்கள், இருவரையும் மீட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், ஒரு வயதும் 3 மாதங்களுமேயான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், தாய் காப்பற்றப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





