தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப்போராட்டம்!

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதிசெய்யுமாறு கோரி சமஉரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கை எழுத்துப்போராட்டம் ஒன்று இன்று (12) இடம்பெற்றது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு,காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு,சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம் போன்ற கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply