பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!

பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால்  இணைந்து நடாத்தப்படும்.

பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில்  ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர்.

இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *