பெண்களை இலக்குவைத்து கொள்ளை – கோடிஸ்வர வர்த்தகரின் மகனும் அவுஸ்ரேலிய நண்பனும் கைது!

பெண்களின் கைப்பைகள் மற்றும் கைப்பேசிகளை இலக்காகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் திருட்டு சம்பவங்களுக்காக பிலியந்தலைப் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்காக வந்துள்ள இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. 

மற்றைய இளைஞர், பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து  5 நவீன மற்றும் 15 ஸ்மார்ட் கைப்பேசிகள், போலி எண் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள், முகமூடியுடன், ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவை  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ரூ. 25 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும்,  நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகல்  தெரியவந்துள்ளது. 

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களையும்  முகமூடியுடன்  தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் திரிவோரையம் இலக்குவைத்து  விசேட சோதனையின்  நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டனர். 

 கடந்த 23ஆம் திகதி மாலை  குறித்த இருவரும் பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போகுந்தர பகுதியில் பொலிஸார் நிறுத்துமாறு சம்க்ஞை காட்டினர்

ஆனால்  குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தனர் இந்நிலையில்  அவர்களை துரத்திச் சென்று, சோதனையிட்டனர்

இதன்போது, மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடுகளில் இருவேறு இலக்கங்கள் காணப்பட்டுள்ளது. 

மேலும் , இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது

மேலும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் போது  கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது. 

பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரளை, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் பெண்களின் பைகளைக் திருடி , அதிலிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை எடுத்துவிட்டு, பைகளை பொல்கொட ஆறு மற்றும் பல்வேறு காட்டுப் பகுதிகளில் வீசியுள்ளதாக குறிப்பிட்டனர். 

கொள்ளையடிக்கப்பட்ட 2 பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட  தொலைபேசிகளை மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றிற்கு  உதிரிப்பாகங்களை விற்பனை செய்துள்ளனர்

 விற்பனை செய்த  பணத்தை கொண்டு போதைப்பொருள் வாங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

பெறுமதியான பாகங்கள் கழற்றி அகற்றப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் உள்ள மகனின் அறையில் இருந்தும், மொரட்டுவ பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் வைத்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *