
கட்டார் செரிட்டி – இலங்கை அலுவலகத்தின் நிவாரண மற்றும மேம்பாட்டு பொருட்கள் விநியோக திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. கட்டார் செரிட்டியின் இலங்கை பணிப்பாளர் மஹ்மூத் அபு கலீஃபா தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர், கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்தின் உயரதிகாரி அலி ஹசன் அல்-எமாடி மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.