கோண்டாவில் பகுதியில் கட்டுப்பாட்டையிழந்த இராணுவ பவுசர் கனரக பட்டாவை மோதித் தள்ளியதில் விபத்து சம்பவித்துள்ளது!
இற்த விபத்து கோண்டாவில் – உப்புமடம் சந்திப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவத்தினரின் தண்ணீர் பவுஸர் தனியாருக்குச் சொந்தமான கனரக பட்டா வாகனம் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது தனியார் வாகனமானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் உயிர் ஆபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.