யாழில் மலேரியாவின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மலேரியா தொற்றால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனைகளில் Malaria Falciparum வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,
அவருக்கு ஏற்பட்ட கடுமையான தொற்று மற்றும் உடல் உறுப்புகளின் செயற்பாட்டு இழப்பே உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.