சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம்: பொன்சேகா

கொழும்பு, மார்ச் 12

சர்வக்கட்சி மாநாடென்பது மக்களை ஏமாற்றும் அரசியல் குண்டாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் இந்த அரசிடம் இல்லை. விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களின் நகர்வுகள்கூட நாடகம்தான். அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் இருவரும் இன்னும் அரசில் இருந்து விலகவில்லை .

நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. நடந்தவைதான் என்ன? எனவே, இப்படியான மாநாடுகள் மக்களை ஏமாற்றுவதற்கான அரசியல் குண்டாகும் என்றார்.

Leave a Reply