பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்ட இந்திய ஏவுகணை: இந்தியா விளக்கம்

இந்தியா, மார்ச் 12

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாகிஸ்தான் எல்லைக்குள், ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டுள்ளதென இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கர் நகரிலிருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மியான் சன்னு என்ற நகரில் வீழ்ந்துள்ளது.

இதனால், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், இந்திய பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முன்னெத்துள்ளது.

அதேநேரம், சம்பவம் குறித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் கண்டனத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசாங்கம், விசாரணைகளின் விபரங்களை வழங்குமாறும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply