விலைவாசி உயர்வைத் தவிர்க்க டீசலை வழங்குங்கள்! தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை

CEYPETCO நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமைக்கு இணங்க டீசல் சலுகையைக் கோரி போக்குவரத்து அமைச்சிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சலுகை வழங்கப்படாவிடின் விலை திருத்தத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

தனியார் பஸ்கள் பயணிகளின் கோரிக்கை காரணமாக சேவையில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை.

எனவே, அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்கொள்ளும் வகையில் விலை திருத்தம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் போக்குவரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 முதல் 30 வரை அதிகரிக்கப்படும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இது போன்ற விலைவாசி உயர்வைத் தவிர்க்க வேண்டுமானால், போக்குவரத்துத் துறைக்கு டீசல் சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply