
நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும், விலை அதிகரிப்பை எதிர்பார்த்து வர்த்தகர்கள் இருப்புக்களை மறைக்க முயல்வதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை இலங்கை மருந்தக சங்கம் மறுத்துள்ளது.
உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தர் ஒரு மருந்தை சந்தைக்கு வெளியிடும் போது அதற்கான சில்லறை விலையை பொதியில் குறிப்பிட வேண்டும் என்ற விதிமுறையை இராஜாங்க அமைச்சர் மறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை மருத்துவ சபையில் 40 வருட அனுபவத்துடன் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளுநராகவும், பின்பற்றப்படும் செயல்முறைகள் பற்றி தனக்கு தெரியும் என சங்கத்தின் தலைவரான கபில டி சொய்சா தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்தின்படி, ஒவ்வொரு மருந்து அட்டைக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யும் நாட்டைப் பொருட்படுத்தாமல், கூறப்பட்டதை விட ஒரு மருந்தை அதிக விலைக்கு விற்பனை முடியாது.
விலைக் குறியை அகற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் சட்டவிரோதமாகக் கருதப்படும் எனக் கூறும் குறிச்சொல்லை உள்ளடக்கியதால், விலைக் குறியை அகற்ற முடியாது.
எனவே, இராஜாங்க அமைச்சரின் கூற்றுகள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மருந்துத் தொகுதி வழங்கப்படும் வரை, பழைய விலையே விற்பனை விலையாகக் குறிப்பிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




