
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்கு தயாராகி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
நேற்றிரவு எரிபொருள் விலையேற்றத்துடன் நாடு மற்றுமொரு பேரழிவை எதிர்கொண்டுள்ளது எனவும் தனது பேஸ்புக் பக்கத்தில் அவா் கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.176 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 254 ரூபாவாகியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அனைத்துப் பொருட்களும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையிலேயே வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்குத் தயாராகி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.




