ஓயாவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலி

பதுளை – ஓயாவில் நீராட சென்ற நிலையில், 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் தமது நண்பர்களுடன், ஓயாவில் நீராட சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பதுளை 3ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply