நாடு முழுவதும் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த 15 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக நேற்று (14) நடத்தப்பட்ட பல நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது மொத்தம் 27,654 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களில், 15 பேர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதற்காகவும், 674 பேர் சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 220 பேரையும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.





