பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை! – அமைச்சர் அறிவிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

இதன்போது, எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் முடிவு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply