மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் பணத்தை வாங்கிய நபர் தப்பியோட்டம்! – யாழில் சம்பவம்

மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1,000 ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுளார்.

யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த இளைஞன் ஒருவர் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றவர்கள் ஊடாக நழுவி தப்பியோடியுள்ளார்.

நீண்ட நேரமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த பெண், தான் காசு கொடுத்த இளைஞனை காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு வீடு திரும்பினார்.

Leave a Reply