கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த யானை பத்திரமாக மீட்பு

கந்தளாயில் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்த ஆண் யானையை வனவிலங்கு அதிகாரிகள், போலீசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (20) ம் திகதி வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த யானை கடந்த 18ம் திகதி சேற்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டது. அதே யானை மீண்டும் அதே இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், நேற்று ( 20) மீண்டும் சேற்றில் புதைந்து சிக்கியது.

அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், சேற்றில் இருந்த யானையைக் கண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், யானையின் நிலையைக் கண்டறிந்து, அதனை மீட்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினர்.

சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்த யானைக்கு ஒரு சிறிய தந்தம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்ததால், இரண்டாவது முறையாக சிக்கியபோது யானை மிகவும் சோர்வாகக் காணப்பட்டது. 

நீண்ட நேரம் போராடிய மீட்புக் குழுவினர், இயந்திரங்களின் உதவியுடன் யானையை மீண்டும் சேற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.

இந்த தொடர் சம்பவங்கள் குறித்து, அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும், வனவிலங்கு மற்றும் மக்கள் மோதல்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *