பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஷ் யாழ்பாணத்தில் கௌரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தகன் ஏற்பாட்டில் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இந்துகாதேவி கௌரவிக்கப்பட்டதோடு இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற யாழ்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எ.எழில்வேந்தன் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநநேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





