பலமிழக்கும் ஐ.நா – நிதி இருப்பு குறைந்தது – யாழில் மூடப்படும் ஐ.நா அலுவலகம்?

கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் காத்திருக்கும் முக்கிய விடயம் ஒன்று இன்றுவரை இழுபறியில் உள்ளது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு வழங்கிய சிறப்பு ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

உக்ரைன் விவகாரம், ஐநாவின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்தி நிற்கும் இந்த நிலையில், ஈழத்தமிழர்கள் ஜெனிவாவை நோக்கி கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே ஐ.நாவின் கையாலாகாத தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் ஈழத்தமிழர்கள். ஆனாலும் ஏதொரு ஒரு நம்பிக்கையில் காத்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 3 தமிழ்க் கட்சிகள் இணைந்து ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

கடந்த 12 ஆண்டுகளில் நடைபெறாத ஒரு சம்பவம் தான், தமிழ் கட்சிகள் இணைந்து முதன்முறையாக கடிதம் அனுப்பியது என்பது. பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும், போன்ற விடயங்கள் அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய கட்சியின் சிவாஜிலிங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் பெரிதாக அக்கறை காட்டியிருக்கவில்லை. கோரிக்கையை ஒப்புக்கொள்ள வைக்கவே நிறைய பாடுபட்டனர். புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் அதனை ஆதரித்தன.

குறித்த பொறிமுறை ஐ.நாவில் முன்வைக்கப்பட்டன. குறித்த பொறிமுறை கடந்த ஒக்டோபர் மாதம் இயங்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த பொறிமுறை முழுமையாக இயக்கப்படவில்லை.

அதற்கு சீன – ரஷிய நாடுகளை ஆதரிக்கும் நாடுகளின், நிதி முறையில் ஏற்பட்ட குறைப்பு நிலைமையே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே பொறிமுறை இழுப்படுகிறது. இந்த இழுபறி நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறும் நிலையில் தமிழ்க் கட்சிகள் இல்லை. தமிழ் மக்களுக்கும் இதில் ஆர்வமில்லை. 12 வருடங்கள் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐ.நாவுக்கு நிதி வழங்கும் நாடுகள் அந்த தொகையை குறைத்துள்ளன. இதனால் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காணப்படும் ஐ.நா. அலுவலகங்கள் மூடப்படும் சாத்தியம் காணப்படுகிறது. அதை நான் உறுதிப்படுத்தி விட்டு சொல்கிறேன்.

இப்படிபட்ட ஒரு நிலையில், தமிழ் மக்கள் கேட்ட தீர்வுகள் கிடைக்கவில்லை. அமுல் படுத்துமாறு கூறிய பொறிமுறைகள் தேய்ந்து கொண்டு செல்கிறது.- என்றார்.

Leave a Reply