பருத்தித்துறை நகரசபையால் ரூபா 7 இலட்சம் பெறுமதியில் சத்துணவு!

பருத்தித்துறை நகரசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போசாக்குத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 700,000 இலட்சம் நிதியினைப் பயன்படுத்தி பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர் முன்பள்ளி, ஆத்தியடி முன்பள்ளி, உதயசூரியன் முன்பள்ளி, 

சென்.அன்ரனீஸ் முன்பள்ளி, புனிதமரியாள் முன்பள்ளி அரும்புகள் முன்பள்ளி ஆகியவற்றின் 127 சிறார்களுக்கு கௌப்பி, பயறு, உளுந்து, நாட்டரிசி போன்ற சத்துணவுகள்  இன்று  வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் குறித்த சத்துணவு பொதிகளை பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *