
புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று இரவுஇடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மினுவான்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு ஆனமடுவ குருபொக்குனகம பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், வீதியில் நடந்து சென்றவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுதித்துள்ளனர்.
எனினும், வீதியில் நடந்து சென்ற நபர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனமடுவ பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




