யாழ்ப்பாணத்தில் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசின் நிதி உதவியுடன், யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் முகாம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே கலந்து சிறப்பித்துள்ளார்.





