
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிக்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,943 பரீட்சை நிலையங்களில் 340,507 பரீட்சார்த்திகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.




