யாழில் தொழிலற்றோர் வீதம் அதிகாிப்பு!

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தின் தொழிலற்றோர் வீதமானது உயர்வாகக் காணப்படுகின்றது என்று மாவட்டச் செயலர்கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், 2022ஆம் ஆண்டுக்கான தொழிற்சந்தையின் ஆரம்ப நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச வேலையை இளையோர் அதிகளவு நாடுகின்றனர். இதனாலேயே தொழிலற்றோர் வீதம் இங்கு உயர்வாகக் காணப்படுகின்றது. பாடசாலைகளில் தொழில்வழிகாட்டி செயல்முறைகள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்கள் அதனை உரிய வகையில் பின்பற்றுவதில்லை.
இன்று 11 தொழில்தருநர்கள் இங்கு வந்துள்ளார்கள். 175 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த வேலைகளை இங்கு வந்துள்ளோர் பெற்றுப் பயனடைய வேண்டும், என்றார்.

Leave a Reply