109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி – 5 விக்கெட்களை சாய்த்தார் பும்ரா !

இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 109 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

இன்று இரண்டாவது நாள் தொடக்கத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வேகப்பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் மத்தியூஸ் 43, டிக்வெல்ல 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக தமது முதலாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 143 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை இந்திய அணி ஆரம்பித்துள்ளது.

Leave a Reply