விமான பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம்! – புனித ஜோன் பொஸ்கோ மாணவன் அஷ்சயன் தெரிவிப்பு

பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படித்தன் மூலமே சிறந்த சித்தியடைய முடிந்தது என யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 193 புள்ளிகளைப் பெற்ற மாணவன் சுதர்சன் அக்சஜன் தெரிவித்தார்.

நேற்று வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 193 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியினை பெற்ற சுதர்சன் அக்சஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நான் பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படிப்பேன் அவ்வாறு படிப்பதன் மூலமே நான் சிறந்த பெறுபேற்றைப் பெற்று கொண்டேன்.

எதிர்காலத்தில் ஒரு விமான பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியமாகவுள்ளது. எனது பெற்றோர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே எனக்கு சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply