கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவன் சித்தி

தற்போது வெளியாகி உள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறு பேற்றின் படி கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நிபாசிர் முகம்மத் முர்ஸித் என்ற விசேட தேவையுடைய மாணவன் சித்தி அடைந்துள்ளார்.

இந்த மாணவன் 43 புள்ளிகளைப் பெற்று விசேட தேவையுடையோர் வகைக்குள் புலமைப்பரிசில் நிதிக்கான தகுதியை பெற்றுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

கிண்ணியா, மகாமாறு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவனின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி ஆவார்.

இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தாயார் தினமும் இந்த மாணவனை நகரும் கதிரை (wheel chair ) மூலமே பாடசாலைக்கு அழைத்து வருவது வழமையாகும்.

இந்த மாணவனின் தந்தை கருத்து தெரிவிக்கும் போது,

அரசாங்கத்தின் உதவித்தொகையை பெறுவதற்கு எங்களது மகன் சித்தி அடைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாகும்.

எந்த வசதியும் இல்லாமல் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலே எங்களது மகனை படிக்க வைத்தோம்.

அவரது எதிர்கால கல்விக்காக இந்த நிதி எங்களுக்கு ஓரளவு ஆறுதலை தரும் என நினைக்கிறேன்.

இதற்காக அயராது உழைத்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply