ஹட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் குடிநீர் வழங்கல் சபையின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஹட்டன் தேசிய நீர் வழங்கல் மற்றும் ஹட்டன் நகர சபை வாரியம் மற்றும் ஹட்டன் நகர சபை இணைந்து, தற்போதைய நீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் தாங்கி பவுஷர் (Water Bowser) வாகனங்கள் மூலம் ஹட்டன் நகர மக்களுக்கும் நகரைச் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் இன்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நகரத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் நகர சபை முதல்வர் மற்றும் தேசிய நீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தேவையான அளவில் மட்டுமே நீரை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் நீரை வீன் விரையம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





