இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிலாபம், இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர்.
கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 133 பேரும், வியட்நாமை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த 13 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





