வவுனியாவில் பெய்த மழை; சுழற்றியடித்த காற்று – 4 வீடுகள் சேதம்!

வவுனியாவில் காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியாவில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை மழை  பெய்திருந்ததுடன் சில பகுதிகளில் காற்றும் வீசியகருந்தது.

இதன்போது  ஆச்சிபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மதுரா நகர் பகுதியில் காணப்பட்ட அரை நிரந்தர மற்றும் தற்காலிக வீடுகளின் கூரைப்பகுதி வேலிகள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன. 

இதில் 4 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்தும் அயல் வீடுகளிலேயே எந்தவித உதவியும்  இன்றி  வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply