நிலக்கரி பரிசோதனையில் முறைகேடு.? ஒப்புக்கொண்ட நிலக்கரி பொது முகாமையாளர்

ட்ரைடென்ட் நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்புகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆரம்பத்திலிருந்தே, அவற்றை பரிசோதித்த ஏற்றுமதி துறைமுக ஆய்வகத்திற்கு முறையான அங்கீகாரம் இல்லையென லங்கா நிலக்கரி நிறுவனம் அறிந்திருந்தது என அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் கோப் (COPE) குழு  முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் கூட்டத்தில் முன்னிலையாகாததுடன், அவர் திட்டமிட்டு கலந்துகொள்வதை தவிர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், கூட்டத்தின் போது கோப் குழுவின் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Leave a Reply