நாட்டில் வலயங்கள் அடிப்படையில் இன்று (15) மின்துண்டிப்பை மேற்கொள்ளும் விதம் தொடர்பிலான அறிவிப்பை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



