விலையேற்றத்தால் திண்டாட்டம் – யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர்!

இலங்கையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் திண்டாட்டாடி வரும் நிலையில் பிரதேச சபை உறுப்பினர் ஈசன் யாசகம் வாங்கும் நூதனப் போராட்டமொன்றை முன்னெடுத்தார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

மக்கள் தற்போது யாசகம் வாங்கும் நிலைக்கு வந்துள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் யாசகம் வாங்கும் நூதனப் போராட்டமொன்றை முன்னெடுத்தார்.

இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Leave a Reply