இந்திய அரசின் உதவியின் கீழ் கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கான முதற்கட்ட நிகழ்வு ஜெயபுரம் மீனவர் சங்க அலுவலகத்திலும், இரண்டாம்கட்ட நிகழ்வு பூநகரியிலுள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை பணிமனையிலும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






