
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் ஒரு நாள் கூட பாடசாலையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு முறையற்ற நிர்வாகமே காரணம்.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஆனது தொண்டர் ஆசிரியர் நியமனத்தை ஏற்றுக்கொண்டதில்லை.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தொண்டர் ஆசிரியர்களை ஆசிரிய நியமனத்தில் உள் வாங்கும் போது பல்வேறு முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றது.
தொண்டராசிரியர் ஆக எந்த ஒரு பாடசாலையிலும் கடமை ஆற்றாது தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவரே குறித்த நியமனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறத்த நியமனமானது வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்ற ஆசிரியர் சங்கம் ஒன்றின் பிரதிநிதியின் சிபாரிசின் பெயரிலே நியமனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஆகவே வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆசிரிய இடமாற்றங்களிலும் நியமனங்களிலும் பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆகவே ஆசிரியர் சங்கம் என்ற வகையில் இனியும் வடக்கு கல்வி அமைச்சின் செயற்பாடுகளை வேடிக்கை பார்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.





